close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, May 19, 2019 • தமிழ் Comments

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு 'விஸ்வாசம்', ஐரா மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பான 'காஷ்மோ' திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'கொலையுதிர்க்காலம்' படமும் அதே தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தே 'கொலையுதிர்க்காலம்' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். வி.மதியழகன் தயாரிப்பில் கோரே ஜெர்யாக் ஒளிப்பதிவில் ராமேஷ்வர் பகத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. 

Get Breaking News Alerts From IndiaGlitz