ஓடிடியில் 'மூக்குத்தி அம்மன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த ஆர்ஜே பாலாஜியின் டுவிட் ஒன்று குறித்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தீபாவளி அன்று மூக்குத்தி அம்மனின் தரிசனம் ஓடிடி மூலம் ரசிகர்களின் வீட்டிற்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

திருமணமான தங்கையை அடைய கணவருக்கு அனுப்பிய ஆபாச படம்: டிவி சீரியல் நடிகர் உள்பட 3 பேர் கைது!

திருமணமான தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

காரில் உலா வந்த டெனால்ட் ட்ரம்ப்… தனது ஆதரவாளர்களுக்காக கொரோனாவிற்கு நடுவிலும் சாகசம்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப்பிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

மறைந்த கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை!

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் சகோதரருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே 

நோபல் பரிசு கடந்து வந்த பாதை… 2020 நோபல் பரிசுகள் குறித்த சில சுவாரசியத் தகவல்!!!

உலகிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர் இவர்கள் தான்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் அறிமுகத்தை வழக்கம்போல்