close
Choose your channels

முதல்முறை கேட்கும்போதே சூப்பர்: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' சிங்கிள் பாடல் வைரல்!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சற்று முன்னர் அந்த பாடல் இணையதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை கார்த்திக் நீதா இயற்றியுள்ளார். மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜசேகர் ஒளிப்பதிவில் லாரன்ஸ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.