பாஜக பிரமுகரை சந்தித்த நயன்தாரா: அரசியலில் ஈடுபட திட்டமா?

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திலும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் தரிசனம் செய்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் திருச்செந்தூரில் நேற்று அவர் முருகனை தரிசித்து கொண்டிருந்தபோது கோவிலில் தற்செயலாக பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் என்பவரை சந்தித்ததாகவும், இருவரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன், நயன்தாராவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தங்கள் கட்சியில் இணைய விரும்பினால் தங்கள் கட்சியில் நயன்தாராவை வரவேற்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது. இதற்கு நயன்தாரா ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாக கூறிவிட்டு ’காலம் வரும்போது பார்க்கலாம்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

பாஜக முன்னாள் எம்பி ஒருவரை தற்செயலாக சந்தித்தை வைத்து நயன்தாரா அரசியலில் குதிக்கவிருப்பதாகவும், அவர் பாஜகவில் இணையவிருப்பதாகவும் ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் பாஜகவில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

தளபதி விஜய்யால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டெல்லியிலும் நடைபெற்றது

இயக்குனராக மாறிய தமிழ் நடிகர்

நடிகர்கள் இயக்குனராவதும், இயக்குனர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் இன்னொரு தமிழ் நடிகர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்

'பாபநாசம்' படம் பார்த்து மனைவியை கொலை செய்தேன்: ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது மாணவி வித்யாவை கொலை செய்துவிட்டு பாபநாசம் பட பாணியில் தப்பிக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர் 

"எனக்கும் தனி கைலாசா அமைக்க ஆசை" - இயக்குனர் பேரரசு.

எனக்கும் தனி கைலாசா அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என 'நான் அவளை சந்தித்த போது' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா?

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவா நடித்த 'சுமோ' என்ற படத்தின் டிரைலரை சற்று முன்னர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது