'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைகிறாரா நயன்தாரா?

  • IndiaGlitz, [Friday,April 05 2019]

மணிரத்னம் இயக்கத்தில் மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக கீர்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலில் உள்ள இன்னொரு முக்கிய கதாபாத்திரம் பூங்குழலி. சேந்தன் அமுதன் காதலியாகவும் ஒரு திறமையான படகோடியாகவும் இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நாவலின் பல திருப்பங்களுக்கு காரணமான இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது

More News

திருமண கோலத்தில் அஜித்-வித்யாபாலன்: வைரலாகும் புகைப்படம்!

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்துக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் கலந்து கொண்டார்.

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாகும் மிஸ் இந்தியா வின்னர்

பிரசாந்த் நடித்த 'ஜீன்ஸ்' படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்தார் . தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மிஸ் இந்தியா வின்னர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'சூர்யா 38' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் தற்போது மீண்டும் பிரபலங்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் ஆதி

நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில்