பிறந்த நாளில் நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Friday,November 18 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ ’காக்கி சட்டை’, தனுஷ் நடித்த ’கொடி’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

நயன்தாராவின் 81வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீ முழுமை அடைந்துவிட்டாய்.. நயனுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நயன்தாராவின்

'என்னை யாராவது கிள்ளுங்கள்”: லைகா டுவிட்டுக்கு விக்ரம் அளித்த பதில்!

'பொன்னியின் செல்வன்' குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த டுவிட்டுக்கு 'என்னை யாராவது கிள்ளி இனி கனவல்ல என்று சொல்லுங்கள் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்: நடிகை பார்வதி நாயர் அறிக்கை

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கே இந்த நிலையா? பொங்கிய சீமான்

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கி எழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைகா சுபாஷ்கரன் கோரிக்கை: 17 அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசு!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் கோரிக்கையை அடுத்து 17 தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.