லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா - அனிருத்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'வேலைக்காரன்', 'கொலையுதிர்க்காலம்' ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
'கோலமாவு கோகிலா' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இவர் சிம்புவின் 'வேட்டை மன்னன்' என்ற படத்தை இயக்கி பாதியில் கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.