நயன்தாராவின் அடுத்த படம்.. படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் அடிப்படையில், இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதவனுடன் நயன்தாரா நடித்த "டெஸ்ட்" என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் அவர் தற்போது, "டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டுடென்ட், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2" உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்துள்ள "டியர் ஸ்டுடென்ட்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதற்காக, படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும், இந்த படத்தில் "வித்யா ருத்ரன்" என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் படம் வெளியாவதோடு, விரைவில் விளம்பர பணிகளும் தொடங்கும் என கூறப்படுகிறது.
It’s a wrap! 😊
— Nivin Pauly (@NivinOfficial) March 23, 2025
Thank you, team. ❤️ #DearStudentsMovie#Nayanthara @PaulyPictures #VineetJain #Maverikmovies #therowdypictures @Sandeepkumark1p @GeorgePhilipRoy @AnendCChandran #ShinosShamsudheen pic.twitter.com/olYoRrfG5L
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com