close
Choose your channels

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

Thursday, August 10, 2017 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளது. இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முதலாக நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது என்பதை நேற்று பார்த்தோம். இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் நயன்தாரா என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா நெருக்கமானவர் என்பதால் இது சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

மேலும் சிவகார்த்த்கேயன், விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்குமே நெருங்கிய நண்பராக இருந்து வரும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz