முதல்முறையாக நயன்தாரா குழந்தைகள் பார்த்த அதிசயம்.. வைரல் வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா குழந்தைகள் முதல்முறையாக ஒரு அதிசயத்தை பார்த்து மகிழ்ந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாராவின் பக்கத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். தனது ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது தனது படங்களின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
குறிப்பாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைகள் முதல் முறையாக வானத்தில் வானவில்லை பார்த்த அதிசயக் காட்சியை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
"முதல் முறையாக எனது குழந்தைகள் வானவில்லை பார்க்கின்றன. இது மிகவும் ஆச்சரியமானது," என அவர் அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments