'ஜவான்' படத்தில் நயன்தாரா பிகினியில் காட்சியா? 'பதான்' தீபிகாவுக்கு போட்டியா?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஒரு பாடல் காட்சியில் பிகினி அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பாடல் காட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இதே போன்ற ஒரு பாடல் காட்சியை ‘ஜவான்’ படத்திலும் இயக்குனர் அட்லி வைத்திருப்பதாகவும் அதில் நயன்தாராவும் பிகினி அணிந்து நடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் பட குழுவினர்களிடமிருந்து வந்த தகவலின்படி ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா பிகினி அணிந்து நடிக்கவில்லை என்று இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.

அஜித் நடித்த ’பில்லா’ திரைப்படம் உள்பட ஒரு சில படங்களில் நயன்தாரா பிகினி உடையில் நடித்திருந்தாலும் அது கதைக்கு தேவையாக இருந்ததால் நடித்திருந்தார் என்றும் ஆனால் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா பிகினி அணியும் அளவிற்கு கதையில் காட்சிகள் இல்லை என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ’பதான்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் சென்டிமென்டாக ‘ஜவான்’ படத்தில் பிகினி காட்சிகள் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

திடீரென தலைமறைவான பிக்பாஸ் அபினவ் மனைவி.. வலை வீசி தேடும் போலீஸார். என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா திடீரென தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

'புன்னகை அரசி' நடிகையின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் வைத்திருந்தரா?

தமிழ் திரை உலகின் புன்னகை அரசி என்று கூறப்படும் கேஆர் விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம் மற்றும் கப்பல் வைத்திருந்த தொழிலதிபர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

முதல் பரிசு பெற்ற இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு ஆச்சரிய தகவல்..

மேடை உள்ள படத்தைப் பார்த்தால் ஒரு அழகிய பெண் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. 

'7ஆம் அறிவு' முதல் '1947' வரை.. ஏ.ஆர்.முருகதாஸ் உடன் உள்ள கனெக்சன் குறித்து சிவகார்த்திகேயன்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' முதல் தற்போது அவர் தயாரித்துள்ள '1947' படம் வரை தனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கியுள்ளார் 

அஜித்துக்கு ஆறுதல் கூறிய லைகா தமிழ்க்குமரன்.. 'ஏகே 62' குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்