காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதியில் நேற்று இரவு விடிய விடிய கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரைத்துறைக்கு எண்ணற்ற பணியாற்றியுள்ள கருணாநிதிக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து கொண்டனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, கருணாநிதியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய இருண்ட 24 மணி நேர சோதனை இது என்று கூறலாம். சூரியனின் கதிர் ஒளியை நாம் இழந்து தவிக்கிறோம். ஒரு இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.

காலத்தை வென்ற ஒரு எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை நாம் இன்று இழந்து வாடுகிறோம். தமிழகத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்துள்ளது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள், தொண்டுகள் கணக்கில் அடங்காது. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் யாராலும் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவிலை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்'

இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

More News

கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

கட்டுக்கடங்காத கூட்டம்: போலீஸ் தடியடியால் இரண்டு பேர் பலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நோக்கி ஊர்வலமாக செல்லவிருப்பதால்

அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்: சீயான் விக்ரம் வருத்தம்

திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மறைவால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்னாருக்கு இறுதி மரியாதை செய்யும் வகையில்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே! ஷங்கர் வருத்தம்

கருணாநிதிக்கு இன்று அதிகாலை முதல் திரையுலகினர்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் ஒருசிலர் வெளிநாடுகளில் இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்