கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

இன்றைய இளையதலைமுறை ரசிகர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழம்பெரும் இயக்குனர்கள் பலர் படம் இயக்குவதையே விட்டுவிட்டனர். ஆனால் இளையதலைமுறையினர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்போதும் வெற்றிப்படங்கள் கொடுக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார்.

கடந்த 1990ஆம் ஆண்டு 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனரான அவர் கடந்த ஆண்டு இயக்கிய 'முடிஞ்சா இவனை பிடி' வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இம்முறை இயக்கவுள்ளது ஒரு தெலுங்கு படம். இந்த படத்தின் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். இந்த படம் அவருக்கு 102வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண் தயாரிக்கும் இந்த படம் வரும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

மும்பையில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகரின் இசை நிகழ்ச்சி

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் உலகப்புகழ் பெற்றவர். 21வயதிலேயே உலகின் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி மில்லியன் கணக்கான டாலர் சம்பாதித்துள்ளார்.

101 முதியவர்களுக்காக 'பாகுபலி 2' சிறப்புக்காட்சி. ஏ.ஆர்.ரெஹானா ஏற்பாடு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகவுள்ளதை அடுத்து இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.1300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது...

விஜய்யை கடவுளாக்கி பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்

உலகில் உள்ள அனைத்து சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விட தமிழக சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்பட பலவிதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது...

கைது உத்தரவு எதிரொலி: நீதிபதி கர்ணன் தலைமறைவா?

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு மனநல சோதனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது...