நடிகர் சங்க தேர்தல். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,July 28 2015]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த 15ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து ஜூலை 15-ந் தேதி புதன்கிழமை வேலை நாள் என்பதால் நடிகர்கள் படப்பிடிப்புக்காக வெளியூர் படப்பிடிப்பிற்கு சென்று இருப்பார்கள் என்றும் அதனால், பொதுவிடுமுறையான, மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தார்.


இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் சங்கத் தேர்தலை இன்னும் இரண்டு மாதங்களில் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களை நீதிமன்றம் நியமனம் செய்தது.

நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு காரணமாக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. செப்டம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினர் தங்கள் அணிக்கு ஆதரவு தேடுவதில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி

விக்ரம் நடித்த 'தூள்' என்ற படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' என்ற பாடலில் சிங்கம் போல் கர்ஜித்த பிரபல பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மாவை யாரும்...

'புலி' ஆடியோ விழாவில் இரண்டு சூப்பர்ஸ்டார்கள்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் 'வானவில் வட்டமாகுதே' சிங்கிள் டிராக் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாருக்கு மாறிய ஜி.வி.பிரகாஷ்

பிரபல இளம் இசையமைப்பாளரும், நடிகராகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பென்சில், த்ரிஷா இல்லைனா நயன்தாரா...

ராஜஸ்தானில் '10 எண்றதுக்குள்ள' கிளைமாக்ஸ்

விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்...

நடிகை அனுஹாசன் படத்தில் சிம்பு

இயக்குனர் மணிரத்னம் மனைவியும் பிரபல நடிகையுமான சுஹாசினி இயக்கிய 'இந்திரா' படத்தில் நடித்த அனுஹாசன் தற்போது 'வல்லதேசம்'...