ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேர்: இந்தியாவில் உச்சத்திற்கு செல்லும் கொரோனா
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் அதீத உச்சம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு தொற்றியுள்ளது. ஏற்கனவே 6 நாட்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு இந்தியாவில் கொரோனா பரவியது என்பதை பார்த்தோம். இதேரீதியில் சென்றால் இந்தியாவில் ஐந்து நாட்களில் அடுத்த ஒரு லட்சம் பேர் பாதிப்பு வந்துவிடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 5,28,859 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 380 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713லிருந்து 3,21,723ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மிக அதிக பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments