இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,391 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 176 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694ஆக அதிகரித்துள்ளதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 14,183 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 984 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தை 49 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 5,104 பேர்களும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக அளவில் 38,21,917 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 2,65,051 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#############

More News

கொரோனா ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் அதிகரிக்கிறது!!! WHO அதிர்ச்சி தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே! நடிகை கஸ்தூரி

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்தனர்.

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் அரசின் புதிய அறிவிப்பு என்ன???

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சியில் விஜய் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? மாஸ்டர் ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்