close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணைந்த முக்கிய நடிகர்

Saturday, September 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து 22 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.

லைகா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் இரட்டை வேடத்தில் கமல் நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது நெடுமுடிவேணு இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், செய்திகள் வெளிவந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.