தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்தது என்பதும் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 48-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் மிக அபாரமாக விளையாடி தங்கப் பதக்கம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பரிசுகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் மூன்று மில்லியனை நெருங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதற்கு முன்னர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் என இருந்த பாலோயர்கள் எண்ணிக்கை, தங்கப்பதக்கம் பெற்ற ஒரே நாளில் 3 மில்லியனை நெருங்கி உள்ளது. மேலும் பல ஃபாலோயர்கள் அதிகரித்து வருவதை அடுத்து இன்னும் பல மில்லியன் ஃபாலோயர்கள் அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம் 

தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.....!சொகுசு கார் முதல் கோடிகளில் குவியும் ரொக்கம் வரை ...!

23 வயது நிரம்பிய நீரஜ்  சோப்ரா பங்குபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுதான். டோக்கியோ-வில்

மாடலிங் செய்யும் 99 வயது பாட்டி? நெட்டிசன்ஸ் வியக்கும் அசத்தலான புகைப்படம்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய பேத்தியின் பிசினஸ்க்காக மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா… இந்தியா பெற்ற இடம்…!

32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த ஜுலை 23 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்தது

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி இவரா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல்