மாதந்தோறும் குண்டு வெடிக்கும்! நீட் போராட்டக்காரர்கள் அனுப்பிய மொட்டை கடிதமா?

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

அனிதாவின் மரணத்திற்கு பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பரபரப்பில் உள்ளது. இந்த நிலையில் சென்னை ரயில் நிலையத்திற்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் நீட் தேர்வை திரும்ப பெறும் வரை மாதந்தோறும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் என எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டுவெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருப்பது நீட் தேர்வுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களா? அல்லது போராட்டத்தை திசை திருப்ப விஷமிகள் செய்த வேலையா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும்.

லட்சக்கணக்கான மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கும் மேல் நடந்தது. எனவே மாணவர்கள் வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு செல்ல மாட்டார்கள் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் இந்த மொட்டை கடிதம் அனுப்பியது யார் என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

More News

சினேகனை வார்த்தைகளால் புரட்டி எடுத்த டிரிகர் சக்தி

பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவருமே சினேகன் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒருவித மரியாதை கலந்த ஒரு அன்பு வைத்திருந்தனர்.

ஆடுகள் தான் பலியிடப்படும், சிங்கங்கள் அல்ல: நீட் குறித்து 'உறியடி' இயக்குனர் விஜய்குமார்

அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த நினைவேந்தல்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தடை செய்யும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்...

ரஜினி, விஜய் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விக்ரம்பிரபு

நடிகர் விக்ரம்பிரபு நடித்த 'நெருப்புடா' திரைப்படம் இந்த வாரம் வெள்ளியன்று வெள்ளித்திரையில் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின்...

இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம். மறந்துவிடாதீர்கள் மக்களே

தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது...