நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு: சேலை, நகைகள், வளையல் அணிய மாணவிகளுக்கு தடை

  • IndiaGlitz, [Saturday,May 06 2017]

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலும் 103 மையங்களில் சுமார் 11.35 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக இங்கும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 மையங்களில் சுமார் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.

நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில் மாணவர்கள் காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்க்கான கட்டுப்பாடுகள்: நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்கள் மட்டும் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.

அதேபோல் அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை மட்டுமே மாணவ, மாணவியர் அணிய வேண்டும்.

தேர்வு அறைக்குள் செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை.

More News

மோகன்லால் படத்தை இயக்கும் எந்திரன்-பாகுபலி 2 டெக்னீஷியன்

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'புலிமுருகன்' படத்தில் சிறப்பாக சண்டைப்பயிற்சி அமைத்த பீட்டர் ஹெயின், கடந்த ஆண்டிற்கான தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே...

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள சந்தானம் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது தனது அடுத்த படத்தின் தலைப்பை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்....

பிரபல நடிகை-அரசியல்வாதி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம போன் கால் ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் முன்னேறி வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...