close
Choose your channels

இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' விருந்து

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது.

குறிப்பாக ஆஸ்கார் நாயகனின் மெலடி பாடலான 'நீதானே' பாடலும், அதிரடி பாடலான 'மெர்சல் அரசன்' பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த இரண்டு பாடல் வரிகளுடன் கூடிய வீடியோவை இன்று மாலை 4 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியிட உள்ளதாக தேனாண்டாள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வீடியோ நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதும் இந்த வீடியோ வெளிவந்தவுடன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.