பெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கான பணத்தை மிரட்டி பறித்த நெல்லை வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த உதயராஜ் என்பவருக்கு சமீபத்தில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண் ஆபாசமாக பேசியதோடு தனக்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் உதயராஜ் அந்த மிரட்டலுக்கு பணியாமல் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நெல்லையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தான் இந்த செயலை செய்தவர் என்றும், பெண் குரலில் பேசிய ஆண் அவர்தான் என்பதையும் கண்டுபிடித்தனர்.

ராஜ்குமாரை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 5 வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண் குரலில் பேசி மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், அந்த பணத்தில் சொந்த வீடு, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

தொலைபேசியில் மிரட்டல் விடுப்பது மட்டுமின்றி ஆபாச படங்களை பகிர்தல் ஆகியவற்றின் மூலமும் அவர் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தொழிலை அவர் சென்னையில் உள்ள இரண்டு பெண்கள் மூலம் கற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜ்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More News

'எருமைச்சாணி' விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் 

மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றான 'எருமை சாணி சேனலுக்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

லவ் பண்றதே பைத்தியக்காரத்தனம் தான்: 'தாராள பிரபு' டிரைலர்

பாலிவுட் திரையுலகில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'டோனார் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'தாராளப் பிரபு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும்

'இந்தியன் 2' விபத்திற்கு பின் சுதாரித்த 'மாநாடு' தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகின

வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ”இரும்பு பெண்மணி” ஜெ.ஜெயலலிதா

எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள்.

'தலைவர் 168' படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது