கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

கந்துவட்டி கொடுமையால் தமிழகத்தில் அவ்வபோது கொலைகளும், தற்கொலைகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை கந்துவட்டியின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து , சுப்பு லெட்சுமி தம்பதிகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கந்துவட்டி குறித்து மனுகொடுக்க வந்தனர். இந்த நிலையில் திடீரென 4 பேர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் படுகாயம் அடைந்த நான்கு பேர்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், 'இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெறும் என்றும் இனிமேல் கந்துவட்டி குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

More News

'எருமைச்சாணி' ஹரிஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

யூடியூப் பிரபலம் 'எருமைச்சாணி' ஹரிஜாவை தெரியாதவர்கள் அனேகமாக இருக்க முடியாது. அவரது ஒவ்வொரு வீடியோவும் யூடியூபில் பிரபலம். ஹரிஜாவின் கொஞ்சலான நடிப்புக்கு இளைஞர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நாளை முதல் டிக்கெட் கட்டண மாற்றம்: ரோஹினி தியேட்டர் அறிவிப்பு

ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி ஆகியவை காரணமாக சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.207 என்று அதிகபட்சமாக இருப்பதால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களின்

தொலைபேசியில் மிரட்டல் வருகிறது: 'மெர்சல்' விவகாரம் குறித்து தமிழிசை

தளபதி விஜய்யின் 'மெர்சல்' என்ற வெற்றி படத்தை சூப்பர் ஹிட் வெற்றி படமாக்க உதவிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

கருத்து சுதந்திரத்திலும், கலையிலும் யாரும் தலையிட கூடாது: கனிமொழி

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் தெரியாமல் எதிர்ப்புவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள்

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம் கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக சென்னையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.