திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவன் நண்பருக்கு தெரிவித்த முதல் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ படத்தின் டைட்டில் ’ஜெயிலர்’ என இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் தலைவரோட பெஸ்ட் படமாக இருக்கவேண்டும் என நெல்சனுக்கு பிரபல இயக்குனர் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான டைட்டில் போஸ்டர் சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வைரலாகிyஅ நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘வா நண்பா வா! தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெஸ்ட் படமாக இது இருக்கனும். உங்களின் மகத்தான அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன், அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் என்பதும், விரைவில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
 

More News

தனுஷின் 'வாத்தி' படத்தின் மாஸ் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி' . இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் என்பதும் சாய் குமார்

ரஜினியின் 'ஜெயிலர்' இன்னொரு 'பேட்ட' படமா? என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் 'ஜெயிலர்' என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம்

11 வருடங்களுக்கு முன்பே கமலுடன் மோதியவர் விஜய்சேதுபதி: சீனுராமசாமி

சமீபத்தில் வெளியான கமல்ஹாசன்  நடித்த 'விக்ரம்' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அசத்தி இருப்பார் என்பதும் க்ளைமாக்ஸில் கமல், விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் இடையிலான சண்டை காட்சி மாஸாக இருக்கும் .

சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா ஆடிய டான்ஸ்: வைரல் வீடியோ

சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இளையராஜா கச்சேரியில் வடிவேலு: வைரலாகும் செம வீடியோ

இசையுலகில் கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல திரைப் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.