close
Choose your channels

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பா?

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீசாவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த வீடியோ ரிலீசுக்கு பின் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.