'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி திடீர் நீக்கம்

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

ஒரு திரைப்படம் படமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாயகன், நாயகி அல்லது வேறு நடிகர்கள் நீக்கம் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இருந்து நாயகி நீக்கப்பட்டிருக்கும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஆம், கடந்த வெள்ளியன்று சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால் 'திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் விமர்சனங்களில் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக இருப்பதாக அனைவரும் கருதினர். ஆனால் முதல் பாதியில் போர் அடிப்பதாகவும், குறிப்பாக நாயகன், நாயகி காதல் காட்சிகள் சுவாரஸ்யம் இன்றி இருந்ததாக அனைத்து தரப்பினர்களும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாயகி மெஹ்ரீன் பிர்சடா வரும் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் புதுவடிவம் பெற்றுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. புதிய வடிவத்தில் உள்ள இந்த படம் விறுவிறுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.