'நெஞ்சுக்கு நீதி' தயாரிப்பாளர் போனிகபூர் போலீசில் புகார்: என்ன காரணம்?

சமீபத்தில் வெளியான உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் போலீசில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர், தற்போது ’அஜித் 61’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். மேலும் அவருடைய தயாரிப்பில் உருவான உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போனிகபூரின் கிரெடிட் கார்டை மர்ம நபர்கள் பயன்படுத்தி ரூபாய் 3.82 லட்சம் பண மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து போனிகபூர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் யார் என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

More News

'நீ என்னை பார், நான் உன்னை பார்க்கிறேன்': ப்ரியா அட்லியின் ரொமான்ஸ் பதிவு!

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் 'நீ என்னை பார், நான் உன்னை பார்க்கிறேன்' என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ள ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'மெட்ராஸ்' நடிகை வாங்கிய சொகுசுக்கார்: விலை இத்தனை லட்சமா?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' திரைப்படத்தில் நடித்த நடிகை பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த காரின் புகைப்படம் இணையதளங்களில்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி பாலிவுட் பிரபலமா?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பாலிவுட் பிரபலம் நாயகி என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கமல்ஹாசனின் 'விக்ரம்' சாட்டிலைட், டிஜிட்டல் ரிலீஸ் எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'விக்ரம்'  திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக

39 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விருது: 'தேவர் மகன்' நடிகை பெருமிதம்!

39  வருடங்களுக்கு பின் தனக்கு விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி என 'தேவர் மகன்' படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.