அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 17 2019]

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

காதலிகளிடம் சிக்கிய கவின்!

பிக்பாஸ் வீட்டின் முதல் ஒருவாரத்தில் பிளேபாய் போன்று சுற்றிய கவின், தற்போது இரண்டு மூன்று பெண்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகியுள்ளார். சாக்சி, அபிராமி, லாஸ்லியா ஆகியோர்களிடம் மச்சான் மச்சான்

எந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது? ஐசிசியை கேலி செய்த அமிதாப்!

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில்

A1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்

நடிகர் சந்தானம் நடித்த 'A1 ' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசரில் பிராமண சமுதாய பெண்கள் குறித்து சர்ச்சை காட்சிகள் இருப்பதாக குற்றஞ்ச்சாட்டப்பட்டு

நடிகர் விவேக் தாயார் காலமானார்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களின் தாயார் மாரியம்மாள் என்பவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86

சூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்