close
Choose your channels

அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது: 'நேர் கொண்ட பார்வை டிரைலர்விமர்சனம்:

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

டிரைலரின் முதல் காட்சியிலேயே வழக்கறிஞரான அஜித், குற்றவாளி கூண்டில் இருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் 'ஆர் யூ வெர்ஜின்' என்று கேட்பதும் அதற்கு அவர் 'இல்லை' என்று கூறுவதுமே பார்வையாளர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியும் அதன் பின்னர் எதிர்பார்ப்பும் ஏற்படும்

நீதிமன்றத்தில் அஜித்தும் ரங்கராஜ் பாண்டேவும் ஆவேசமாக வாத, பிரதிவாதங்கள் நடத்தும் காட்சிகளும், சாட்சி சொல்ல வந்தவர்கள் டென்ஷனாகும் காட்சியும், போலீசையே நீதிபதி முன் மிரட்டும் வக்கீல் காட்சி என தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத நீதிமன்ற காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளது. குறிப்பாக 'அப்படியெல்லாம் நடக்காது, நடக்கக்கூடாது' என்று அஜித் பேசும் அந்த ஆழமான வசனம் நிச்சயம் திரையரங்குகளில் தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம், நீதிமன்ற காட்சிகளில் உணர்ச்சிவசப்படுதல், ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்திறீங்க' என்ற அமைதியான வசனமும் நிச்சயம் அஜித் ரசிகர்களை திருப்தி செய்யும்.

யுவன்ஷங்கர் ராஜாவின் அதிரடி பின்னணி இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்தே தெரிகிறது. இந்த டிரைலரில் காணப்படும் ஒரே ஒரு குறை வித்யாபாலன் காட்சி இல்லை என்பது மட்டுமே. மொத்தத்தில் அஜித் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தும் ஒரு படம் தயாராகிவிட்டது என்றே இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.