ரூ.3.50 கோடி சம்பளம் உள்ள வேலையை உதறிய இளைஞர்: காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,June 08 2022]

3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணத்தை அவர் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலையில் அதுவும் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் வேலை என்பது மிகமிக கடினம் என்ற நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வேலை செய்த சீனாவை சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் தனக்கு நெட்பிளிக்ஸ் வேலை பிடிக்கவில்லை என கூறி விலகிவிட்டார். இந்த வேலையில் இலவசமாக உணவு, அதிக சம்பளம் மற்றும் அதிக விடுமுறை கிடைத்தது என்றும், ஆனால் இந்த வேலை எனக்கு போரடித்து விட்டதால் வேலையை விட்டு நின்று விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த முடிவு அவரது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த லின், அதற்கு முன் அமேசானில் பணிபுரிந்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தபோது தனது வேலையில் சலிப்பு ஏற்பட தொடங்கி விட்டதாகவும் ஆரம்பகாலத்தில் பணியில் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதற்காக சம்பளம் நிறைய தரப்பட்டாலும் தன்னால் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை இருந்ததாகவும் அதனால் வேலையில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் சொந்த தொழிலில் ஈடுபட இருப்பதாகவும் இதில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு சொந்த தொழிலில் தகுந்த வருமானம் எதுவும் வரவில்லை என்றாலும் உற்சாகமளிக்கும் வேலையை செய்ய வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

அப்ப சூர்யா ரோலக்ஸ் இல்லையா? அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'அந்த இரண்டு படங்கள் போல் எதிர்பார்க்க வேண்டாம்': நயன்தாரா அடுத்த பட இயக்குனரின் பதிவு

தனது முந்தைய இரண்டு படங்களை போல் இந்த படத்தை எதிர்பார்க்க வேண்டாம் என நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கிய இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

'விக்ரம்' படம் பார்த்து ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியான 'கேஜிஎப் 2' மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்

 சூர்யாவின் ஃபயர் காட்சியில் நிஜமாகவே தீப்பற்றிய திரை: 'விக்ரம்' திரையிட்ட தியேட்டரில் பரபரப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் ரிலீசாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்: 'விக்ரம்' இயக்குனருக்கு கேள்வி எழுப்பிய பிக்பாஸ் நடிகை

கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு 'நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம், எங்களையும் பயன்படுத்தி இருக்கலாம்' என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட