close
Choose your channels

வளைச்சு வளைச்சு புதிய படங்களை வாங்கும் நெட்பிளிக்ஸ்: அடுத்த படம் என்ன தெரியுமா?

Tuesday, September 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ தமிழ் ஆகிய ஓடிடி நிறுவனங்கள் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நெட்பிளிக்ஸ் அதிக தமிழ் திரைப்படங்களை வாங்கி குவித்து வருகிறது.

ஏற்கனவே நயன்தாராவின் திருமண வீடியோவின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்று வருகிறது.

குறிப்பாக அஜீத்தின் ’துணிவு’ ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ உதயநிதியின் ’மாமன்னன்’ உள்பட பல முக்கிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இன்னும் படப்பிடிப்பே தொடங்காத விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ’மைதானம்’ என்ற திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.