இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுப்பாரா விக்னேஷ் சிவன்?

  • IndiaGlitz, [Wednesday,January 18 2023]

அஜித்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர் இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ’ என சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் பிப்ரவரி முதல் இந்த படம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் அஜித் ஒரு தொட்டியில் கை கழுவும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் பலர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு நெட்டிசன் ஒருவர் ஓபன் சேலஞ்சு விட்டு இருக்கிறார். நீங்கள் எடுக்கிற அஜித் படம் மங்காத்தாவை விட மாஸ் ஆ இருக்குமா? என்று பார்க்கலாம். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் அனிருத் மற்றும் நயன்தாரா இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியாது. இவர்கள் இருவரும் இல்லை என்றால் நீங்கள் ஜீரோ, இவர்கள் இருவரும் தான் உங்களுடைய விசிட்டிங் கார்டு, உங்கள் படங்கள் அனைத்தையும் அனிருத் தான் காப்பாற்றி உள்ளார்’ என்று சவால் விட்டுள்ளார்.

இந்த நெட்டிசனின் சவாலை ஏற்று விக்னேஷ் சிவன் ’ஏகே 62’ படத்தை மங்காத்தா படத்தை விட ’ஏகே 62’ படத்தை சூப்பர் ஹிட் மாஸ் படமாக கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

ராத்திரி நேரத்தில் பீச்சில் ஆட்டம் போட்ட 'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள்.. வைரல் வீடியோ

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஷோ 'குக் வித் கோமாளி' என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்

மோகன்லாலை அடுத்து 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் தகவல்களை பார்த்து வருகிறோம். 

பணமூட்டையை எடுத்து கொண்டு வெளியேறியது இந்த போட்டியாளரா? ஆச்சரிய தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில் இன்று 100வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இன்றைய தினம் பணமூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் பார்த்தோம். 

'எந்தன் நண்பியே நண்பியே'... ஷிவினுக்கு மறக்க முடியாத பரிசளித்த போட்டியாளர்!

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு தினத்துடன் முடிவடைய உள்ளது என்பதும் அன்றைய தினம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்

பத்து தல ராவணனா, பாஞ்சு வரும் போர் முரசு: தனுஷின் 'வாத்தி' சிங்கிள் பாடல்

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும்