close
Choose your channels

அதிபர் ட்ரம்ப்பை வைரஸ் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிபர் ட்ரம்ப்பை வைரஸ் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

 

கொரோனா அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 93 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 4,743 பேர் நோய் தொற்றால் பாதிக்கப் பட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கொரோனா வை கட்டுப் படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பதிவில் “வர்த்தகம் மற்றும் ஏர்லைன் நிறுவனங்கள், குறிப்பாக “சீன வைரஸால்” பாதிக்கப் பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உறுதுணையாக இருக்கும். நாம் முன்பை விட அதிக பலமாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அதிபரின் இந்தப் பதிவுக்குத்தான் உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் அதிபர் இப்படி பேசலாமா? என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பயனாளர் ஒருவர் “கொரோனா வைரஸ் சீன வைரஸ் என்றால் “அதிபர் ட்ரம்ப் ஒரு அமெரிக்க வைரஸ்“ என்றே பதிவிட்டு இருக்கிறார். மேலும், கொரோனா உண்மையில் வைரஸ் இல்லை, அதிபர் ட்ரம்ப் தான் வைரஸ் என்றும் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகமும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸை “சீன வைரஸ்“ என்று அழைப்பதன் மூலம் ட்ரம்ப் கோபத்தைத் தூண்டுகிறார், இந்த இழிவான செயலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா நோய் தொற்று பரவியதில் இருந்தே இந்த நோய்க்கான காரணத்தைக் குறித்து பல விமர்சனங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. சீனாவின் பயோ வார் தான் காரணம் என்று ஒரு பக்கமும், அமெரிக்கா, சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என்றும் குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன. சீன வெளியுறவு துறை அமைச்சர் முன்னதாக அமெரிக்கா இந்த வைரஸை சீனாவில் பரப்பியது என தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் காணொலி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து சீனா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது குறிப்பிடத் தக்கது.

உலகில் பல வைரஸ் தொற்று நோய்கள் பல்லாயிரக் கணக்கான உயிர்களை கொன்று குவிக்கிறது. இந்நிலையில் அந்த வைரஸ் கிருமி தோன்றிய இடங்களையோ, பொருட்களையோ குறிக்கும் விதமாக பெயரைச் சூட்டக் கூடாது என உலக சுகாதார அமைப்பு 2005 இல் தனது விதியை திருத்தி இருக்கிறது. ஒரு இடத்தையோ அல்லது பொருளையோ குறிக்கும் போது அந்த மக்கள் அவமானப் படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக இதைத் தவிர்க்க வேண்டும் என்று WHO மிக எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

 கொரோனா வைரஸ் தொகுதியில் கண்டறியப்பட்ட இந்தப் புதிய வைரஸ் கிருமிக்கு Covid-19 பெயர் சூட்டி இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நாட்டின் பெயரை குறிப்பிட்டு சொல்லியிருப்பது தகாத செயல் என்று உலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.