கன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடிக்கும் மேல் ஃபாலோயர்களை பெற்ற நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி வருவார் என்பதும், அவரது ஒவ்வொரு பதிவிற்கும் மில்லியன் கணக்கான லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊர்வசி ரவுத்தேலா மற்றும் அவரது காதலர் கௌதம் குலாட்டி ஆகியோர் இணைந்து நடித்த ’வெர்ஜின் பானுப்பிரியா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காலத்திற்கு முன்பே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து இந்த திரைப்படம் வரும் 12ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை விளம்பரம் செய்யும் வகையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் கன்னித்தன்மையுடன் இருப்பதே தவறு என்றும் கன்னித்தன்மையை இழக்க ஒரு நாயகி துடிப்பதும் தான் கதை. கதையின் நாயகியான ஊர்வசி கன்னித்தன்மை இழக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிவதை நகைச்சுவை மற்றும் கவர்ச்சியான காட்சிகளால் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

இந்த படத்தில் உள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ’ஈஸி ஏ’ என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் அந்த படத்தில் எம்மா ஸ்டோன் நடித்த கேரக்டரில் தான் ஊர்வசி ரவுத்தேலா நடித்து இருப்பதாகவும் ரசிகர்கள் டிரெய்லரில் இருந்தே கண்டுபிடித்துள்ளனர். இது உண்மையா என்பது வரும் 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் தெரிய வரும்

More News

மதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததை அடுத்து சமீபத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 5 வரை மதுரையில் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டுள்ள

இந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன???

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

'நித்யானந்தா' புகழ் விஜய் டிவி பிரபலத்தின் காதல் திருமணம்!

விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம் உள்பட பல திறமையுள்ளவர்கள் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

சிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கை கையில் எடுத்தவுடன் சாத்தான்குளம் சென்ற சிபிசிஐடி போலீசார்,

கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன்

சிம்ரன் தமிழில் நடித்த முதல் திரைப்படமான 'விஐபி' மற்றும் 'ஒன்ஸ்மோர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியானது.