வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன. மற்ற புதுபுது கண்டுபிடிக்கள் அறிமுகப் படுத்தப்பட்டாலும் அவை துல்லியமாக கொரோனா முடிவினை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இக்குறையைப் போக்குவதற்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் புது கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவி மூலம் வெறுமனே 90 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை செய்து முடிவினைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், டிஎன்ஏநட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் 90 நிமிடங்களில் கொரோனா முடிவை அறிந்து கொள்ளும் புது கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவி ஒரு சிறிய பெட்டிப் போன்று காணப்படும் என்றும் கூறப்படுகிறது. நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி லேப் இன் கார்ட்ரிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த சிறிய பெட்டிக்குள் கொரோனா மாதிரியை வைக்கும்போது கொரோனா மரபணு, மாதிரியில் இருக்கிறதா எனத் துல்லியமாக இந்தக் கருவி காட்டிக்கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் மீது இக்கருவிகளைக் கொண்டு சோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும் தகவல் கிடைக்கிறது. அச்சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்ததால் தற்போது இங்கிலாந்து சுகாதார நிறுவனம் அங்குள்ள 8 மருத்துவமனைகளில் இக்கருவியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இதிலுள்ள மற்றொரு குறைபாடு இக்கருவியைக் கொண்டு ஒரு நேரத்தில் ஒரே ஒரு கொரோனா மாதிரியை மட்டுமே சோதனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். எனவே ஒரு கருவியைக் கொண்டு ஒருநாளைக்கு 16 கொரோனா மாதிரிகளை மட்டுமே சோதனை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்டிபிசிஆர் போன்று பல மணி நேரங்கள் கொரோனா முடிவுக்காக காத்திருக்காமல் வெறுமனே 90 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் தற்போது இக்கருவிக்கு பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இங்கிலாந்து நிறுவனம் 58 லட்சம் புதிய கருவிக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

முந்தானை முடிச்சு' ரீமேக்: ஊர்வசி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து

வாடிவாசல் நாயகனே, வாருங்கள் அரசியலுக்கு: சூர்யா ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

'வாடிவாசல் நாயகனே வாருங்கள் அரசியலுக்கு' என சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது

டுவிட்டரில் விஜய்யின் செல்பி செய்த மகத்தான சாதனை!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதுதான் எங்க தலைவர், குருவே சரணம்: ரஜினி குறித்து ராகவா லாரன்ஸ்

மும்பையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இனி பிழைக்க மாட்டோம் என்று நினைத்து அவர் ரஜினிக்கு பதிவு செய்த டுவிட்டில்