96 படத்தின் புதிய கிளைமாக்ஸை கூறிய பார்த்திபன்

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்றதால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் 100வது நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விஜய்சேதுபதி, த்ரிஷா, பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்களும், சேரன், சமுத்திரக்கனி, திருமுருகன்காந்தி, பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் '96' படத்தின் கிளைமாக்ஸில் படம் பார்த்த அனைவரும் ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களும் குறைந்தபட்சம் கட்டிப்படித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அப்படி ஒரு காட்சி படத்தில் இல்லை என்றும் கூறி, ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த கட்டிப்பிடி காட்சியை தற்போது நடித்து காட்டுமாறும் விஜய்சேதுபதி, த்ரிஷாவை கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மேடைக்கு வந்து கட்டிப்பிடித்தனர். அதன்பின் பேசிய விஜய்சேதுபதி 'இதுதான் படத்தின் புதிய கிளைமாக்ஸ்' என்று கூறினார்.

மேலும் பேசிய பார்த்திபன், 'மக்கள் திலகத்திற்கு பின் மக்களை உண்மையாகவே நேசிப்பவர் மக்கள் செல்வன் தான் என்றும், அவர் ரசிகர்களிடம் காட்டும் அன்பு உண்மையானது என்றும், அவர் ஒரு நடிகர் என்று கூறுவதைவிட நல்ல மனித நேயம் உள்ளவர் என்று பாராட்டுவதில் பெருமை அடைவதாகவும் கூறினார். மேலும் என்னுடைய படத்தில் நடிக்க மறுத்தவர்கள்  இருவர், அதில் ஒருவர் நயன்தாரா இன்னொருவர் த்ரிஷா என்றும் கூறிய பார்த்திபன், 'மற்ற படத்திற்கு 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா ஆனால் இந்த படத்தில் த்ரிஷா இல்லைன்னா த்ரிஷா என்றும், ஜானு கேரக்டரில் த்ரிஷாவை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது' என்றும் கூறினார்.