ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி அமைப்பிற்கும் இடையே பிரச்சனைகள் நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஃபெப்சி நிறுவனம் ஒருபக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தயாரிப்பாளர் சங்கமோ ஃபெப்சி ஊழியர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவிக்க கோலிவுட் திரையுலகில் ஒருவித டென்ஷன் இருந்தது

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர்கள் உள்பட இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த பிரச்சனையும் இன்றி அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினியின் 'காலா', விஜய்யின் 'மெர்சல்' உள்பட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு இடையிடையே சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் காரணமாக இனிமேல் தடையின்றி படப்பிடிப்புகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

'காக்கா முட்டை', 'ஆறாது சினம்', தர்மதுரை என தமிழ் திரையுலகில் தரமான படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

கமல், சிவகார்த்திகேயனை அடுத்து முதன்முதலாக ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி 

கோலிவுட் திரையுலகில் இதுவரை பெண் வேடத்தில் நடிக்காத நாயகர்களே இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் பெண் வேடம் போட்டாலும், பெண் வேடம்

எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்

பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.

ஜெயலலிதா ஜெயலலிதாதான்! பொதுகுழு விருந்தில் புலம்பி தள்ளிய உறுப்பினர்கள்

ஜெயலலிதா இருந்தபோது பொதுக்குழு கூடுகிறது என்றால் விருந்து சாப்பாடு தடபுடலாக இருக்கும். மட்டன் கறி, வஞ்சிர மீன் என அசைவ சாப்பாடு வாயில் எச்சில் ஊற வைக்கும்.

சசிகலாவை நீக்கும் விவகாரம்: அமைச்சர்கள் மிரட்டலால் திடீரென பின்வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக பொதுகுழு இன்று காலை கூடிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது