ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் கண்டுபிடிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.இந்த வகை ஆப்பிளின் உண்மையான பெயர் டபிள்யூஏ38. எனினும், இவற்றின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், இதற்கு 'காஸ்மிக் கிரிஸ்ப்' என்ற பெயர் வந்தது. இந்த ஆப்பிளைக் கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.வாழைப்பழங்களை அடுத்து அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பழமாக ஆப்பிள் இருக்கிறது. அமெரிக்காவிலேயே மிகவும் அதிகளவில் ஆப்பிளை அறுவடை செய்யும் மாகாணமாக விளங்கும் வாஷிங்டனின் பிரபல ஆப்பிள் ரகங்களான 'கோல்டன் டெலிசியஸ்', 'ரெட் டெலிசியஸ்' ஆகியவை சமீபகாலமாக 'பிங்க் லேடி', 'ராயல் கலா' ஆகிய ரகங்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன.இந்நிலையில் இந்த புத்திய வகை ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது.

இது மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது என்று கூறுகிறார் இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ்.இந்த வகை ஆப்பிளை சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10-12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும் என்று கேட் மேலும் கூறுகிறார்.12 மில்லியனுக்கும் மேற்பட்ட 'காஸ்மிக் கிரிஸ்ப்' ரக ஆப்பிள் மரங்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மட்டும் பயிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

More News

சாக்லேட் கொடுத்து ஏமாற்றி 8 வயது சிறுமியை நாசம் செய்த குடிகாரன்: அதிர்ச்சி தகவல்

ரியங்கா ரெட்டி உள்பட பல இளம்பெண்களும், சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு வருவதாக தினந்தோறும் செய்திகள் வெளிவ்நது

12 மணி நேரத்தில் டப்பிங்: பிரபல நடிகர் செய்த சாதனை

ஒரு திரைப்படத்திற்கு டப்பிங் பேச ஹீரோக்கள் பொதுவாக நான்கு நாட்கள் முதல் ஒருவாரம் வரை டைம் எடுத்து கொள்வதுண்டு. ஒருசிலர் அதற்கும் மேல் டைம் எடுத்து கொள்வதுண்டு.

எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் ஈடு செய்ய முடியாது: கமல்ஹாசன் அறிக்கை

மேட்டுப்பாளையத்தில் நேற்று சுற்றுச்சுவர் இடிந்ததால் 17 பேர் பலியான சம்பவம் அனைவரையும் உலுக்கிய நிலையில் இந்த சம்பவம் குறித்து சிலர் உண்மையாகவே கண்டனம் தெரிவித்தும்

இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? ரஜினி பட இயக்குனர் டுவீட்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்ததால் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே.

22 வயது இளைஞனிடம் சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவி: மெரீனாவில் நடந்த கொடூரம்

சென்னை மெரினா கடற்கரையில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது