பிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை! சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு பொம்மி என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரவு நேரத்தில் திடீரென அவருக்கு பிரசவ வலி வந்தது. அப்போது மருத்துவர் இல்லாததால் அங்கு பணிபுரியும் நர்ஸ்கள் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் குழந்தை வெளியே வரத்தொடங்கியதும் அனுபவம் இல்லாத நர்ஸ் ஒருவர் குழந்தையின் தலையை பிடித்து இழுத்தபோது தலை துண்டாகி அவர் கையோடு வந்தது. மேலும் குழந்தையின் உடல் பகுதி மட்டும் தாயின் உள்ளே மாட்டிக்கொண்டது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த நர்ஸ்கள், பொம்மியை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் பொம்மியின் உள்ளே இருந்த குழந்தையின் உடலை பெரும் போராட்டத்திற்கு பின் வெளியே எடுத்தனர். தற்போது பொம்மிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுபவம் இல்லாத நர்ஸ் பார்த்த பிரசவத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

More News

நட்சத்திர வேட்பாளர் தொகுதி: மதுரையில் வெல்வது யார்?

தென் தமிழகத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி மிகவும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தான் பி.கக்கன்  கே.டி.கே தங்கமணி, பி.ராமமூர்த்தி,

இளம் இயக்குனர், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அருண்விஜய்க்கு, 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

10 லிட்டர் பிராந்தி, ரூ.10 லட்சம் பணம்: ஒரு வேட்பாளரின் வாக்குறுதி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறை. வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு,

46 வருடங்கள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக படத்தில் யோகிபாபு

பழம்பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். புகழ்மணி இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

விவசாயி உயிருடன் இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கேள்வி

தேர்தல் ஆணையம் உயிர் உள்ள விலங்குகளின் சின்னத்தை தருவதில்லை என்று கடந்த சில ஆண்டுகளாக முடிவெடுத்துள்ளது.