Red&Black-ல் மிரட்டலாக களமிறங்கி இருக்கும் புதிய BS6 ராயல் என்ஃபீல்டு. விலை என்ன தெரியுமா..?!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

இந்தியாவிலுள்ள வாகன ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு பிஎஸ்6 கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் ரூ. 1.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பிஎஸ்-6 வாகன விதிகள் வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதற்காக நாட்டிலுள்ள பல்வேறு வாகன நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகளை புதிய விதிகளுக்கு ஏற்றவாறு மாற்றி தயாரித்து வருகின்றன.

ஏற்கனவே பஜாஜ், ஹீரோ, ஹோண்டா போன்ற நாட்டின் முன்னணி வாகன நிறுவனங்கள் பல தங்களுடைய தயாரிப்புகளை பிஸ்-6 விதிகளுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.இந்த வரிசையில் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் தயாரித்துள்ள பிஎஸ்6 கிளாசிக் 350 மாடல் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


 

பிஎஸ்-4 பைக்கிற்கான எஞ்சினில் இருக்கும் கார்ப்பூரேட்டர் எஞ்சின் மாற்றப்பட்டு, ஃபெயூவெல்-இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் கூடிய எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அலாய் சக்க்ரங்கள், டியூப்லெஸ் டயர்கள் போன்றவை புதியதாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த பைக் கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் மற்றும் குரோம் பிளாக் ஆகிய நிறத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதில், ஸ்டெல்த் பிளாக் அல்லது கன்மெட்டல் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கும் மாடல்கள் மட்டுமே அலாய் சக்கரங்கள் மற்றும் டியூப் லெஸ் டயர்களை பெற்றிருக்கும்.

முன்னதாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்-4 வெர்ஷனில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது 19.8 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.ஆனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும், புதிய எஞ்சினுக்கு ஏற்றவாறு பைக்கின் பவர் மற்றும் டார்க் திறன் அமையும் என ராயல் என்ஃபீல்டு தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய பிஎஸ்-6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் தற்போது எலெக்ட்ரானிக் ஃப்யூவெல் இஞ்ஜெக்‌ஷன் சிஸ்டம் உள்ளது. இதனுடைய புகைப்போக்கி குழாயிலும் நச்சுக் காற்று வடிகட்டி அனுப்பும் ’கூடுதல் கேட்டாலிக் கன்வெர்டர்’ அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.