குட்டி விஜய்சேதுபதிக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் இரண்டே வாரத்தில் ஓடிடியிலும் வெளியாகி வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் சேர்த்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டரின் சிறுவயது கேரக்டரில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார் என்பதும் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் அவரது நடிப்பிற்கு விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் மகேந்திரனுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. தன்னுடைய படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சம்மரில் மஞ்சளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்: 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்திசுரேஷ், தற்போது ரஜினியின் 'அண்ணாத்த' செல்வராகவனின் 'சாணிக்காகிதம்'

தேர்தல் தோல்வி பயம்...ஜாதிப்பாகுபாடு....! அநியாயமாக கொலையுண்ட 2 இளைஞர்கள்...!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், அநியாயமாக இரு இளைஞர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'குக் வித் கோமாளி' சீசன் 3: குக்-கள், கோமாளிகள் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கனி வின்னராகவும்

தமிழகத்தில் ஊரடங்கா...! விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன...?

தமிழகத்தில்  கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது.

வைரலாகும் கே.எஸ்.ரவிகுமாரின் மகள்கள் புகைப்படம்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் வாக்களிக்க திரையுலக பிரபலங்கள் பலர் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. ரஜினிகாந்த், கமல்ஹாசன்