வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!!! பாதிப்பு யார் யாருக்கு???

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

 

நாளை (ஆகஸ்ட் 4) வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் தென்மேற்கு பருவமலை மேலும் வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. ஏற்கனவே தென்மேற்கு பருவமலை ஆரம்பித்து இருப்பதால் தற்போது உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட தென்மேற்கு பருவமழ மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக  இந்த மாநிலங்களின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநில மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

அதைத்தவிர மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. தென்மேற்கு, மத்திய மேற்கு, மன்னார் வளைகுடா, அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

2 நாட்களாக தொடர்ந்து பற்றியெறியும் காட்டுத் தீ… 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்து நாசம்!!!

அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி பகுதியில் உள்ள மலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தால் குட்டிக்காடுகளை உருவாக்கி அசத்தும் சென்னை மாநகராட்சி!!!

மியாவாகி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காடு வளர்க்கும் முறைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தற்போது நடைபெற்று வரும் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி

மும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று புதிய கல்வி திட்டத்தின் படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள்

'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்

பணம் குறித்து ஓவியா கூறிய தத்துவம் ஒன்றால் நெட்டிசன்கள் கடுமையான விவாதம் நடத்தி வருகின்றனர்