அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி: எடப்பாடியார் ஆட்சி நீடிக்குமா?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி-ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சசிகலா அணி தினகரன் அணியாக மாறியது. தற்போது தினகரன் சிறைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அணியாக உள்ளது.

ஒருபக்கம் எடப்பாடியார் அணியும் ஓபிஎஸ் அணியும் ஒன்றிணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடியார் அணியில் இருந்து 13 எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் தனியாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் தோப்பு வெங்கடாச்சலம் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று கொங்கு மாவட்ட அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட தலித் எம்.எல்.ஏக்கள் தனி அணியாக பிரியவிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சசிகலாவின் உறவினர் விவேக் தலைமையேற்க வேண்டும் என்று ஒரு குரூப்பும், டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று இன்னொரு குரூப்பும் கிளம்பியுள்ளது.

போகிற போக்கை பார்த்தால் அதிமுக சிதறு தேங்காய் போல பல அணியாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒரு சிறந்த முடிவை ஈகோ இல்லாமல் எடுக்க வேண்டும் என்றும் உண்மையான அதிமுகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்...

'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

யாராவது இந்த கேள்வியை கேட்டால் கன்னத்தில் பளாரென அறையுங்கள். பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதாவின் மர்ம மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசிகலா-தினகரன் ஜெயில், அதிமுகவில் பிளவு என தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவை குறித்து பெரிதாக எந்தவித விமர்சனமும் செய்யாதது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது...

இவர்கள் இருவரும் இணைந்தால் 'அவதார்' சாதனையை முறியடிக்கலாம். அல்போன்ஸ்புத்ரன்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்தது. முதல் பாகம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது பாகமும் வெளியான 4 நாட்களிலேயே ரூ.300 கோடியை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாரா சுகேஷ் சந்திரா?

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் டெல்லி போலீசார் மிக தீவிரமாக தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்...