பிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்தார் சினேகன், புதிய தலைவர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதுவரை தலைவராக இருந்த பாடலாசிரியர் சினேகன் பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் விதிகளின்படி ஒருவர் ஒரு வாரத்திற்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். அந்த வகையில் நேற்றுடன் சினேகன் தலைவர் பதவியேற்று ஒருவாரம் முடிந்துவிட்டதால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

சினேகனுக்கு பதிலாக காயத்ரி ரகுராம் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் புதிய தலைவருக்கான போட்டியில் பங்கேற்றனர். இதில் காயத்ரிக்கு 9 வாக்குகளும், கணேஷுக்கு 4 வாக்குகளும் கிடைத்ததால் 5 வாக்குகள் வித்தியாசத்தில் காயத்ரி வெற்றி பெற்று புதிய தலைவராக பொறுப்பேற்றார். தலைவர் பதவியில் போட்டியிட்ட கணேஷும் காயத்ரிக்கு ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவியேற்ற ஒருசில நிமிடத்தில் காயத்ரிக்கும் பரணிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்பதும் பரணியுடன் கஞ்சாகருப்பு, சக்தி ஆகியோர்களும் மோதிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்து வெளியேற போகிறவர் பரணியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அமெரிக்காவில் அரசியல் ஆலோசனை செய்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் குறித்து சில பரபரப்பான கருத்துக்களை கூறினார்.

மேற்குவங்கத்தில் ஜிஎஸ்டியில் தள்ளுபடி: திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மேற்குவங்க மாநில அரசு திரையரங்க கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் தள்ளுபடி வழங்கியுள்ளது.

நாசர் குடும்பத்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசர் வீட்டுக்கு தளபதி விஜய் திடீர் விசிட் அடித்து நாசர் குடும்பத்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

டிடிஎச் மூலம் திரைப்படங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி திட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது படங்களில் பின்னால் வரக்கூடியதை முன்கூட்டியே கூறியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜல்லிக்கட்டு ஜூலியின் முதல் காதல் ஆல்பம்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்களின் பார்வையால் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜூலி.