வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்

சமீபத்தில் அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி கேரளா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் புரட்டி எடுத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தம் தோன்றி உள்ளதாகவும் இந்த காற்றழுத்தம் மே 23-இல் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மே மாதம் 19 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை சென்னையில் மழை பெய்யும் என்று வெதர்மேன் கூறியுள்ளார். டவ்தேவ் புயலின் தாக்கம் மற்றும் மேற்கு காற்றழுத்தம் வலுவிழந்ததால் இந்த புதிய காற்றழுத்தம் உருவாகி இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்வது நல்லது என்றாலும் புயலாக மாறி சென்னைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் சென்னை மக்கள் திண்டாடி வரும் நிலையில் மீண்டும் ஒரு புயலை சந்திக்கும் நிலையில் இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை.

 

More News

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை: கி.ரா. மறைவு குறித்து நடிகை பிரியா பவானிசங்கர்!

சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் மறைவு குறித்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்களும், முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும்

ஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா? என்ன செய்யும் தமிழக அரசு?

தமிழகத்தில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக 30 ஆயிரத்தைத் தாண்டுகிறது.

கொரோனாவுக்கு உறவினரை பறிகொடுத்த தங்கர்பச்சானின் வேதனையான பதிவு! அரசுக்கு வேண்டுகோள்

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது உறவினரை கொரோனாவுக்கு பலி கொடுத்ததன் காரணமாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உருக்கமாக முகநூலில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினசரி தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி கொண்டு இருக்கின்றனர் என்பதும் அவர்களில் சிலர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்

நிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்ததால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.