விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்: சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் அபராதமா?

  • IndiaGlitz, [Sunday,October 30 2022]

விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது என்பதும் உயர்த்தப்பட்ட அபராத தொகை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் ரூபாய் 42 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தம் கொண்டு வந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் அரசாணை வெளியிட்டு இருந்தார்.

இதன்படி புதிய அபராதத்தொகையின் விவரங்கள் பின்வருமாறு: 

'ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.1,000  அபராதம் உயர்வு.

சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500  அபராதம் உயர்வு.

செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.1,000 அபராதம்.

காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 அபராதம் உயர்வு.

'லைசென்சு' இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரம் ஆக அபராதம் உயர்வு உயர்வு.

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் (நோ பார்க்கிங்) ரூ.100-லிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்வு.

தடை செய்யப்பட்ட சாலையில் (நோ என்ட்ரி) வாகனங்களை ஓட்டினால் ரூ.100-லிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்வு.

மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ரூ.10,000 அபராதம். 

மேற்கண்ட புதிய அபராத தொகை கடந்த 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அதாவது அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் மட்டுமே விதிமுறைகளை மீறியதாக ரூபாய் 42 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து 6.187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அபராத உயர்வு காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து போலீசார்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்கு வாதங்கள் நடந்தன. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசி சமரசம் செய்து அபராதத்தை வசூலிக்க வேண்டும் என போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

40 வயதில் குழந்தை பெற்ற 'கோலங்கள்' சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை தேவயானி நடித்த 'கோலங்கள்' என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஒருவர் 40 வயதில் குழந்தை பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே.. நயன்தாராவை வர்ணித்தவர் யார் தெரியுமா?

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை  வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியர் இவர்தான்.. நிம்மதி அடைந்த பெண் போட்டியாளர்கள்!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன சிம்பு, தனுஷ் படங்கள்: டிசம்பரில் வெளியாகும் ஜெயம் ரவி படம்!

டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டிசம்பரில் ஜெயம் ரவியின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.