close
Choose your channels

கொரோனா ஊரடங்கில் அசத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள்!!!

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா ஊரடங்கில் அசத்தும் நவீனத் தொழில்நுட்பக் கருவிகள்!!!

 

கொரோனா ஊரடங்கில் உலகம் முழுவதும் உள்ள காவல் துறை அல்லாடிக்கொண்டு வருகிறது. மக்களை கட்டுக்குள் வைப்பதற்கு பல தடைகளை விதித்தாலும் சிலர் தங்களின் தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலைமையில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய தேவையில் தற்போது கொரோனா ஊரடங்கிற்காகவும் கொரோனா பாதிப்பினை தெரிந்து கொள்வதற்காகவும் பல தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தெற்காசிய நாடுகள் தற்போது கொரோனா நோய்ப்பரவலைத் தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளிலும் தற்போது பல நாடுகள் விரைந்து செயல்படுகிறது.

சீனா - கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்ற பொருட்களைக் கொடுப்பதற்கு பெரும்பாலும் சீனா ரோபோக்களையே பயன்படுத்தியது. மேலும், செயற்கைக்கோள் உதவியுடன் நோயாளியின் தொலைத்தொடர்பு தரவுகளை வைத்து நோயாளி எங்கு சென்றார் அவரோடு தொடர்புடைய நபர் யார் என எளிதாக கண்டுபிடித்தது. இந்த வழிமுறையைத் தற்போது பல நாடுகள் கையாண்டு வருகின்றன. மேலும், சீனாவில் ஊரடங்கின்போது வெளியே வருபவர்களைக் கண்டுபிடிக்க தானியங்கி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. தெருக்கள், முக்கிய வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் உள்ள CCTV கேமராக்களைக் கொண்டு நோயாளிகளின் விவரம் கண்டறியப்பட்டது. மக்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்துக் கொண்டே இருப்பதற்காக செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டன. ஒருவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது இந்த செயலியின் மூலம் தெரிந்து கொண்டு பரிசோதனை மேற்கொள்ள பெரிதும் பயன்பட்டது.

இந்தியா – கேரள மாநில அரசு 3 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்ததோடு அம்மாநிலத்தில் உள்ள CCTV கேமராக்களைப் பயன்படுத்தி நோயாளிகளோடு தொடர்புடைய 900 பேரை கண்டுபிடித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழக அரசு கொரோனா அறிகுறி இருப்பவர்களை எளிமையாகத் தொடர்புகொள்ள Gcc Monitoring என்ற செயலியை உருவாக்கி இருக்கிறது. இந்திய அரசு கொரோனா நோய்த்தொற்று இருப்பவர்களை எளிதாக கண்டுபிடிக்க Aarogya setu என்ற செயலியை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா- ஊரடங்கில் இருக்கும் மக்களை கண்காணிக்க தானியங்கி Drone களைப் இந்நாடு பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் செயற்கையோளுடன் இணைந்து ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இடங்களை படம் எடுத்துக் கண்காணிக்கும் வேலைகளை செய்துவருகிறது. இப்படி தொடர்ந்து மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவதால் கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் அந்நாடு கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தானியங்கி Drone களைப் பயன்படுத்தி கிருமிநாசினிப் பொருட்களை வீடுகள், தெருக்களின் மீது தெளித்தும் வருகிறது. சில பேசும் ரோபோக்களையும் தென்கொரியா, மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக உருவாக்கியிருக்கிறது. கொரோனா நோயாளியுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக Corona 100m என்ற செயலியையும் தென்கொரியா பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன்- கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கவும் அவர்கள் சென்ற இருப்பிடத்தை அறியவும் Systom tracer என்ற செயலியை பிரிட்டன் அரசு உருவாக்கி இருக்கிறது. மேலும், தங்களது அருகில் கொரோனா நோயாளிகள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளவும் 100m என்ற செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிரிட்டன் அரசு பொது மக்களின் தொலைத்தொடர்பு தரவுகளை வைத்து கொரோனா நோயாளிகளை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான அரசுகள் மக்களின் செல்போன் தரவுகளை வைத்துக்கொண்டே நோயாளிகளோடு தொடர்புடையவர்களையும் அவர்கள் சென்ற இடங்களையும் தெரிந்து கொள்கிறது. இஸ்ரேல், தென்கொரியா, சீனா, தைவான் போன்ற நாடுகள் பெரும்பாலும் கொரோனா பரவலைத் தெரிந்து கொள்ள மக்களின் செல்போன் தரவுகளைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இத்தாலி, ஜெர்மன் போன்ற சில நாடுகளில் செல்போன் தரவுகள் தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கமாகப் பார்க்கப்பட்டு வரும் நிலையில் Place tracking வசதிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது. சிங்கப்பூர் அரசு பெரும் அளவிலான ரோபோக்களையும் CCTV கேமராக்களையும் தற்போது கொரோனா பரவலைத் தடுக்க பயன்படுத்தி வருகிறது.

சில நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பதைக் கண்டறிய சில செயலிகளை உருவாக்கி மக்களை பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று எங்கிருந்து வந்தது, உடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை எளிதாகக் கண்காணிக்க முடிகிறது. கொரோனா பரவல் தடுப்புக்காகவும், நோயாளிகளை கண்காணிக்கவும் தற்போது நவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இதற்கான தேவைகள் அதிகரித்து இருப்பதால் தற்போது Tomson Routers Foundation தொழில்நுட்ப இயந்திரங்களை உருவாக்க ஊக்குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.