நடிகர் ஆர்யா மோசடி வழக்கில் திடீர் திருப்பம்: போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

நடிகை ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.71 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் தற்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகர் ஆர்யா காவல்துறையிடம் நேரில் ஆஜராகி ’புகார் அளித்த பெண் தனக்கு யார் என்று தெரியாது என்றும் அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்பதை காவல்துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் இது குறித்து வித்தியாசமான கோணத்தில் தமிழக போலீசார் விசாரணை செய்தபோது தற்போது சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். முகமது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய இருவரும் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் தாங்கள்தான் ஆர்யா என ஏமாற்றி அவரிடம் பண மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

நடிகர் ஆர்யா மோசடி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஒலிம்பிக் பதக்க வீராங்கனையுடன் நடிகை ராதிகா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

ரஜினி, அஜித், விஜய் நடிக்க வேண்டிய படங்கள், மிஸ் ஆகிருச்சு: இயக்குனர் ப்ரவீன் காந்தி பேட்டி

ரஜினி, அஜித், விஜய் படங்களை இயக்க தனது வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாகவும் இயக்குனர் பிரவீன் காந்தி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். 

நாடக காதலை அடுத்து இயக்குனர் மோகன் ஜி எடுத்துள்ள அடுத்த பிரச்சனை!

நாடகக் காதலை மையமாக வைத்து இயக்கிய மோகன்ஜி 'திரௌபதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மதம் மாறி அரசியல் செய்வது குறித்த பிரச்சனையை மையமாக

தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்: 2 குழந்தைகளுக்கு அம்மாவான ஜெயம் ரவி நாயகியின் புகைப்படம்!

கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஒருவர் தற்போது 2 குழந்தைக்கு அம்மாவாகி உள்ள நிலையிலும் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம்

இயக்குனர் ஷங்கர் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் வழக்கு!

பிரபல இயக்குனர் ஷங்கர் மீது ஏற்கனவே லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.