close
Choose your channels

பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

 

கொரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்ட தாய்லாந்து மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக முகக்கவசங்களை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அறுவை சிகிச்சை முகக்கவசம் அல்லது N95 முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகக் கவசங்களை பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்க முடியாது. எனவே பாங்காங்கில் உள்ள பி.என்.எச் மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக புதிய முகக்கவசங்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முகக்கவசங்கள் குழதைந்தையின் உடலில் பாதியை மறைக்கும் அளவிற்கு இருக்கிறது. பெரியவர்கள் அணிவது மாதிரி முகத்தை ஒட்டி இறுக்கத்தை ஏற்படுத்தாத வண்ணம் இந்த முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் பிறந்த குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத தருணத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் மிகவும் வரவேற்கத் தக்கது என இந்தப் புதிய முயற்சிக்குத் தற்போது பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2423 ஆக உயர்ந்து காணப்படுகிறது. உயிரிழப்பு 32 ஆகவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசாங்கம், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பொதுக்கூட்டங்களுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.