close
Choose your channels

மழலை மொழியில் கமலுக்கு வாழ்த்து கூறிய நியூஜெர்ஸி சிறுமி

Wednesday, November 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் தொடர்ந்து இன்று காலை முதல் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்று அவருடைய ரசிகர்கள் முதியோர் இல்லம், அனாதை இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அன்னதானம் மற்றும் உடைகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நியூஜெர்ஸி சிறுமி ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து கடிதம் ஒன்றை தனது மழலை மொழியில் எழுதி அனுப்பியுள்ளார். மயூரி என்ற சிறுமி எழுதிய அந்த கடிதத்தில், ',கமல் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில தொடர்ந்து உங்களை பார்ப்பேன். எனக்கு நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் உங்களுக்கும் அன்று தான் பிறந்தநாள் என்று என்னடைய அப்பா சொன்னார். உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. கமல்ஹாசன் பிறந்த நாளில் பிறந்த சிறுமி மயூரிக்கு கமல் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.